நடிகர் நகுல் தற்போது தனது மகனின் பிறந்தநாளை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார். பார்ட்டி வைத்தும் நடனமாடியும், அவர் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். பலரும் நகுலின் மகனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாய்ஸ் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நகுல். நடிப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் பாடியும் இருக்கிறார். ஆரம்பத்தில் உடல் பருமனாக காணப்பட்ட இவர் உடல் எடையை குறைத்து ஹீரோவாக மாறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு இவர் தனது தோழியான ஸ்ருதயை மணந்தார். இந்த தம்பதிகளுக்கு அகிரா என்கிற குழந்தை பிறந்தது. அகிரா செய்யும் குறும்புகளை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நகுல். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஒரு மகன் பிறந்திருந்தார். குளிக்கும் பாத் டப்பில் பிரசவம் பார்த்து அந்த வீடியோவை அவர்கள் பகிர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் தனது மகனுக்கு ஒரு வயது பூர்த்தியாகி இருக்கும் நிலையில் பார்ட்டி, ஆடல், பாடல் என பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர் நகுல் மற்றும் ஸ்ருதி தம்பதிகள். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Video Credits: Actor Nakkhul