Categories: சினிமா

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்.! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.!

வெளியிட்டது

15 ஆண்டுகள் கழித்து பிறந்த மகனுக்கு நடிகர் நரேன் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்.! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.! 1

‘அஞ்சாதே’ என்கிற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் நரேன். இவர்சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ‘சித்திரம் பேசுதடி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பின்னர் இவர் ‘அஞ்சாதே’, ‘தம்பிக்கோட்டை’, ‘யூ டர்ன்’, ‘பள்ளிக்கூடம்’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘கைதி’, ‘விக்ரம்’ என பல படங்களில் நடித்திருக்கிறார்.

சிறப்பான நடிப்பால் பலரின் மனங்களைக் கவர்ந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். கேரளாவை பூர்விகமாக கொண்ட நரேன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த அவர் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு ‘கத்துக்குட்டி’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு திரும்பி இருந்தார்.

‘விக்ரம்’ படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் 2007ம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2008ம் ஆண்டு தன்மையா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.

தற்போது 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் நரேனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில், தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மகனுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. மம்மூட்டி மற்றும் கமலஹாசன் நேரில் சென்று நரேன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்