பாக்யா நடத்தையை சந்தேகப்படும் கோபியை வெளுத்து வாங்கிய ராதிகா.! சிறப்பான சம்பவம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது பாக்யா மற்றும் பழனிச்சாமியை ஒன்றாக இணைத்து வைத்து பேசும் கோபியை ராதிகா கோபத்துடன் திட்டுகிறார். பாக்யாவுக்காக கோபியை ராதிகா எதிர்க்க துணிகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். தற்போது இந்த சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்யா நடத்தையை சந்தேகப்படும் கோபியை வெளுத்து வாங்கிய ராதிகா.! சிறப்பான சம்பவம்.! 1

விளம்பரம்

வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து பழனிச்சாமி பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது பாக்யாவும் பழனிச்சாமியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயம் அங்கு வரும் கோபி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இவனுடன் அமர்ந்து கூத்தடித்துக் கொண்டிருக்கிறாயா? என்று சொல்லி பாக்யாவை மிகவும் அசிங்கப்படுத்துகிறார். அப்போது இனியாவும் ராதிகாவும் வீட்டுக்குள் வருகின்றனர். எனக்காக பேச யாரும் இல்லை, நீயாவது வந்து கேளு என்று ராதிகாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார் கோபி.

தொடர்புடையவை  அப்படியே ஆலியா போல ரீல்ஸ் செய்து காட்டிய ஐலா.! இந்த பொண்ணு இப்பவே இப்படி நடிக்கிறாங்களே.!

பாக்யா நடத்தையை சந்தேகப்படும் கோபியை வெளுத்து வாங்கிய ராதிகா.! சிறப்பான சம்பவம்.! 3

விளம்பரம்

தற்போது ராதிகா அவர் யாருடன் பேசினால் உங்களுக்கென்ன? என்று சொல்லி அதிரடியை கிளப்புகிறார். இதனால் கோபி மற்றும் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment