சின்னத்திரை நடிகர் நவீன் ஷூட்டிங்கிற்கு அழைக்க சென்ற உதவி இயக்குனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் வைரலாகி வருகிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்கிற சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பெற்றவர் தான் ஆக்டர் நவீன். இவர் நடிக்க வருவதற்கு முன்பு டிக்டாக்கில் வீடியோ செய்து வெளியிட்டு வந்தார். பின்னர் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பின்னர் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கும் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப. பின்னர் மீண்டும் கலர்ஸ் தமிழிலேயே நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ‘கண்ட நாள் முதல்’ என்கிற ஒரு சீரியலில் நடித்து வருகிறார் நவீன். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் ஷாக்கிங் ஆன ஒரு செய்தி கிடைத்துள்ளது. ஆக்டர் நவீன் உதவி இயக்குனர் ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ள விஷயம்தான். இதனால் அவரது முகம், கண் பகுதிகள் கடுமையாக காயம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. வழக்கம் போல் ஷூட்டிங்கிற்கு வந்த நவீன் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, ஷூட்டிங்ற்கு வரமால் தனது அறையிலேயே இருந்துள்ளார். இதனால் அவரை ஷூட்டிங்கிற்கு அழைத்து வருவதற்காக உதவி இயக்குனர் குலசேகரன் அவருடைய அறைக்கு போய் உள்ளார். ஆனால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் அங்கே ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கடைசியில் மோதலாக மாறியுள்ளது. அப்போது நவீன் உதவி இயக்குனர் குலசேகரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவ்வாறு தாக்கியதில் உதவி இயக்குனருக்கு கண்ணுக்கு கீழே அடிபட்டு ரத்தம் வழிய, முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். பின்னர் நவீன் மீது சின்னத்திரை சங்கத்திலும், மதுரவாயில் போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார்.

தற்போது போலீஸ் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. நவீன் ஷூட்டிங்கில் இதுபோல முரட்டுத்தனமாக தான் நடந்து கொள்வார் என்று இதயத்தை திருடாதே சீரியலில் நடித்த நிலானி என்பவர் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதில் ஒரு காட்சியில் தன்னை கீழே தள்ளி விடும்படி கூறியபோது, நிஜமாகவே கீழே தள்ளி தனக்கு முதுகெலும்பில் பிராக்சர் ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். நவீனுக்கு ஆரம்பத்தில் இருந்தே கண்ட நாள் முதல் தொடரில் நடிக்க விருப்பமில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே தான் அந்த வெறுப்பை அவர் உதவி இயக்குனர் மீது காட்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பதை நவீன் தான் விளக்க வேண்டும். இந்த பிரச்சனைக்குப் பிறகு நவீன் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? இல்லை சீரியலை விட்டு விலகுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Trend Talks