விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இதனால் இந்த தொடர் நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடி வந்தது.

இந்நிலையில் இந்த தொடர் எதிர்பாராத விதமாக முடிவை சந்தித்தது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக இந்த தொடரின் இரண்டாவது பாகத்தை வேறொரு கதை கோணத்தில் வைத்து எடுத்து வருகின்றனர். இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இந்த தொடரில் உள்ள செந்தில் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வசந்த் வசி.
தற்போது அவர் சீரியலை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடித்த வெங்கட் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகம் ஒன்றில் பிரபலமான மீனா மற்றும் ஜீவா ஜோடி, இந்த இரண்டாவது பாகத்திலும் செந்தில் மற்றும் மீனவ இணைவதில் ரசிகர்கள் சந்தோசமாக உள்ளனர்.