தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தனது கடின முயற்சியால் இன்று தனக்கான சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளார் அஜித். இவர் படங்கள் வெளியாகும் நாள் தான் இவரின் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம் என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு ரசிகர்கள் அஜித்தை மனதில் வைத்து உள்ளனர்.

அஜித்திற்கு கடைசியாக வெளியாகிய வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அப்டேட் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை போஸ்டர்கள் ஆக்சனாக வெளியாகி வந்த நிலையில், தற்போது கதாநாயகி த்ரிஷா உடன் அஜித் இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.