இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்து உள்ளார். வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் அடுத்த மாதம் தள்ளி சென்றது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வீடியோவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்பில் இயக்குனர் சிவாவிடம் தனக்கு வரலாறு போன்ற கதையை ரெடி பண்ண சொன்னதாகவும், அந்த கதையை தான் தற்போது சூர்யாவுக்காக சிவா மாற்றி எழுதி உள்ளதாக கூறி உள்ளார். மேலும் நானே இப்படத்தில் நடித்திருப்பேன் ரொம்ப நல்லா இருக்கு கதை எனவும் கூறி உள்ளார்.