80களின் இறுதிகள் தொடங்கி இவர்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு திரைத்துறையில் காமெடி ஜாம்பவான்களாக இருந்தவர்கள் கவுண்டமணி, செந்தில். இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்ட பிறகும் இவர்கள் இருவரின் காமெடியை பார்த்தால் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருந்தனர். வேறு காமெடியன்களே நிற்க முடியாத அளவிற்கு திரைத்துறையை ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் வாழைப்பழ காமெடியும், சொப்பன சுந்தரி காமெடியும் காலம் கடந்தும் நம்மை சிரிக்க வைக்கும்.

காமெடி மட்டுமில்லால் துணை வேடங்கள், குணசித்திர வேடங்களில் நடிப்பது போன்று நிறைய படங்களில் நடித்துள்ளார் செந்தில். எளிய பிண்ணனியில் பிறந்து வளர்ந்த இவர் மிகவும் கஷ்டப்பட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். இவருக்கு ஜோடியாக கோவை சரளா பல படங்களில் நடித்துள்ளார். வயது மூப்பின் காரணமாக பின்னாளில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் படத்தில் நடப்பதில் இருந்து முற்றிலுமாக விலகினார் செந்தில். தற்போது கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் Youtube Video Code Embed Credits: Viral Videos
அவ்வபோது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் செந்தில்.சமீபத்தில் ஒரு சிலை திறப்பு விழாவில் கவுண்டமணியுடன் கலந்து கொண்டார் செந்தில். தற்போது ஒரு வீடியோ சமூக வரைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் செந்தில் அவர்களின் பேத்தி மிருதி செந்தில் வசனத்தைப் பேசி க்யூட்டாக நடித்துக் காட்டுகிறார். இந்த ரீல்ஸ் தற்போது பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..