தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். நடிப்பது மட்டுமில்லாமல் உதவி இயக்குநர், பாடகர், பிண்ணனி பேசுவது என்று பன்முக திறமையாளராக இருந்து வருகிறார் சித்தார்த். முதலில் இவர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனநராக பணியாற்றி வந்தார். பின்னர் முதல் படமே ஷங்கருடன் அமைந்தது. இந்த படம் பெரிய வெற்றியைக் கொடுத்தது. சாக்லேட் பாய் என்று இவருக்கு பட்டங்களும் அளிக்கப்பட்டது. பிறகு சித்தார்த் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தாண்டா போன்ற படங்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் அருவம் என்ற படத்தில் நடித்தார். பிறகு தமிழில் எந்தவொரு படமும் சரியாக ஓடவில்லை. மேலும் அவரின் படங்கள் மக்களிடையே சரியான வரபேற்பை பெறுவதில்லை. இதனால் சித்தார்த் சினிமா துறையில் இருந்து விலக உள்ளதாக முடிவெடுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். Youtube Video Code Embed Credits: CineUlagam
அவர் கூறியுள்ளதாவது எனக்கு ஏற்ற மாதிரியான நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், அது சரியாக அமையும் பட்சத்தில் தொடர்ந்து நடிப்பேன் என்றும், இல்லையென்றால் சினிமாவை விட்டு விலகி வேறு ஒரு சொந்த தொழில் செய்ய உள்ளதாகவும் சித்தார்த் அறிவித்தார். சொந்த தொழில் செய்யும் திட்டத்திற்கான வேலைகளும் செய்துவருகிறேன் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..