வெட்கப்படும் லட்சுமி ராய்!!மாஸ் காட்டும் லெஜெண்ட் அண்ணாச்சி!!!தி லெஜெண்ட் படத்திலிருந்து வெளியான வாடிவாசல் பாடல்!!!

சென்னையின் மிக பிரபலமான ‘சரவணா ஸ்டோர்ஸ்” குடும்பத்தை சேர்ந்த சரவணன் சொந்தமாக சென்னை பாடியில் சொந்தமாக “தி லெஜெண்ட் சரவணா” என்ற பெயரில் துணி கடை வைத்துள்ளார். அந்த கடையின் விளம்பர பாடல்களில் நடிகைகள் ஹன்சிகா தமன்னா போன்றோருடன் இணைந்து ஆடி விளம்பரத்தில் நடித்து இருந்தார், அண்ணாச்சி சரவணன் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெட்கப்படும் லட்சுமி ராய்!!மாஸ் காட்டும் லெஜெண்ட் அண்ணாச்சி!!!தி லெஜெண்ட் படத்திலிருந்து வெளியான வாடிவாசல் பாடல்!!! 1

விளம்பரம்

அப்போது நமக்கு தெரியவில்லை அவர் பின்னாளில் சினிமாவில் நுழைந்து ஹீரோவாக போகிறார் என. ஆம், பாலிவுட் கதாநாயகி, பெரிய காமெடியன், சிறந்த இசை அமைப்பாளர் என பெரிய கூட்டணியில் அறிமுகமாக உள்ளார் நம்ப அண்ணாச்சி.

சரவணன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஜாக்குலின், விவேக், பிரபு என பலர் நடிக்க படத்தை ஜேடி-ஜெர்ரி என்கிற இயக்குனர் கூட்டணி இயக்கி வருகிறது. படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். சிறப்பாக தயராகி வரும் இந்த படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகியிருந்த நிலையில் இப்பொது இரண்டாவது பாடல் வெளிவந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  பயங்கர விபத்துக்குள்ளான ரம்பாவின் கார்.! கனடாவில் குழந்தைகளுடன் சென்ற போது பெரும் விபத்து.!

கவிஞர் சிநேகன் வரிகளில், ராஜு சுந்தரம் நடனம் அமைத்து கொடுத்துள்ள இந்த பாடலுக்கு அண்ணாச்சியுடன் லட்சுமி ராய் நடனம் ஆடி உள்ளார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வாடிவாசல் என்ற தலைப்பில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் வருகிற 29ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாபெரும் வகையில் நடைபெற உள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

விளம்பரம்

Video Courtesy – ThinkMusic

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment