தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிம்பு. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். சமீபகாலமாக இவரது படங்கள் சரியான வரவேற்பினை பெறாத நிலையில், படங்களில் நடிப்பதையும் சிம்பு முழுவதும் தவிர்த்தார். தற்போது ரசிகர்களுக்காக மீண்டும் பழைய சிம்புவாக என்ட்ரி கொடுத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இவர் தனது தங்கை இலக்கியா மகன் ஜேசன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த வீடியோவை அவரது தங்கை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.