தாத்தா நான் ஸ்கூல் போமாட்டேன்.. பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. தற்போது வரை பல குழந்தைகளும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களாகத்தான் உள்ளனர். தற்போது இவர் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு உள்ளனர்.

தாத்தா நான் ஸ்கூல் போமாட்டேன்.. பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அதே சமயம், இப்படத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது ரசிகர்கள் கவனம் அனைத்தும் கூலியின் பக்கம் திரும்பி இருக்கிறது.

தாத்தா நான் ஸ்கூல் போமாட்டேன்.. பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் மகனை சூப்பர் ஸ்டார் இன்று காலை பள்ளிக்கு அழைத்து சென்று உள்ளார். பள்ளி செல்லமாட்டேன் என கூறிய பேரனை காரில் அழைத்து சென்று அவரின் வகுப்பறைக்கு சென்று விட்டுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வன் படம் தெலுங்கு படம் என கூறிய சுஹாசினி? வச்சி செய்யும் நெட்டிசன்கள்

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment