ஆர்மியில் தாடி எப்படி..? கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே சினிமாவில் உச்சத்தை அடைந்த ஒரே நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு இவரின் கடின உழைப்பே காரணம். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று முன்னணி நட்சத்திரமாக சினிமாவில் உருவெடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். முன்னணி நாயகர்களுக்கு இணையாக நூறு கோடிகளில் சிவகார்த்திகேயன் படங்கள் வசூலை பெற்று வருகிறது.

ஆர்மியில் தாடி எப்படி..? கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்..! 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்து உள்ளார். அக்டொபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

ஆர்மியில் தாடி எப்படி..? கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்..! 3

விளம்பரம்

இப்படத்தில் ஆர்மியில் இருந்து கொண்டு சிவகார்த்திகேயன் தாடி வைத்தது எப்படி என கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து பதிலளித்த அவர்,44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் என்ற சிறப்பு குழு ஆர்மியில் இருப்பதாகவும், அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என விளக்கி உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment