“சிறுமிகளிடம் சில்மிஷம்”!!”போக்சோவில் கைதான பிரபல மலையாள நடிகர்”!!

வெளியிட்டது

மலையாள சினிமாவில் தொடர்ந்து பாலியல் புகார்கள் தொடரப்பட்டு வருகிறது. ஏற்கனவே பிரபல முன்னணி நடிகர் திலீப் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதானது மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. சில நாட்கள் முன்பு தயாரிப்பாளர், நடிகர் விஜய் பாபுவும் இதே போன்ற ஒரு வழக்கில் கைதானார். இந்த பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் தற்போது மற்றொரு முன்னணி நடிகர் மீது இவ்வாறான வழக்கு தொடுக்கப்பட்டு அவர் கைதாகியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"சிறுமிகளிடம் சில்மிஷம்"!!"போக்சோவில் கைதான பிரபல மலையாள நடிகர்"!! 1

மலையாள சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான மயோகம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. இவர் பிரபல நடிகர் ரவியின் மகனாவார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு 2013ஆம் வெளியான “புண்யாலன் அகர்பத்திகள்” படம் நல்ல பெயரையும், பல விருதுகளையும் வாங்கி கொடுத்தது. சில ஆண்டுகளிலியேயே முன்னணி மலையாள நட்சத்திரமாக மாறிய இவர், தொடர்ந்து தமிழ் படங்களிலும் அறிமுகமானார். 2012ஆ ஆண்டு பிரபு சாலமனின் “கும்கி” படத்தில் இவர் தமிழில் அறிமுகமானார். இருப்பினும் நடிகர் விஷால் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான “கதகளி” படம் இவரை நல்ல வில்லனாக அறிமுகம் கொடுத்தது.

பின்னர் அசுரவாதம் படத்திலும் நல்ல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போதைய மலையாள சினேம்வின் மதிக்கத்தக்க நடிகராக இருக்கும் இவர் தற்போது தவறான செயல் காரணமாக கைது கைது செய்யப்பட்டுளளார். ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் பேரில் இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கூறிய விளக்கம் படி, காரில் அமர்ந்து இருந்த நடிகர் ஸ்ரீஜித், வண்டியை தாண்டி நடந்து நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமிகள் இருவர்கள் முன், திடீரென கீழிறங்கி தன்னுடைய ஆணுறுப்பை கட்டியதாக கூறப்படுகிறது. அந்த சிறுமிகளின் பெற்றோர்கள் கொடுத்த வழக்கின் அடிப்படையில் இவர் இப்பொது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இது முதல் முறை அல்ல அவர் இவ்வாறு ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்படுவது. ஏற்கனவே 2016ஆம் ஆண்டு 16 பெண்கள் முன்னிலையில் இவர் இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy – Manorama News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்