இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் கோப்ரா. டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் போன்ற தரமான படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கோப்ரா படத்தை எடுக்க ஆரம்பித்தார். பல தடைகளால் இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருனாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. விக்ரம் ரசிகர்கள் பலரே படம் நன்றாக இல்லை, மூன்று மணி நேரம் படத்தின் நீளமே இந்த படத்திற்கு எதிரியாக இருக்கிறது என்று தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படங்கள் என்றாலே பொதுவாக எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். படத்திற்கு தேவை என்றால் தன்னை மாற்றிக் கொள்வதில் கைதேர்ந்தவராக இருப்பவர் விக்ரம். இந்த நிலையில் கோப்ரா படத்தில் மொத்தம் பத்து கெட்டப்புகள் என்று சொல்லவும் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால் இவர் இந்த 10 கெட்டப்புகளும் கொலை செய்வதற்காக, உருவத்தை மாற்றிக்கொள்ள போடப்பட்டது என்பதால் அங்கேயே மிகப்பெரிய அப்செட் ஆகிவிட்டனர் விக்ரம் ரசிகர்கள். மேலும் கணித ஆசிரியராக இருக்கும் அவர் கணித முறையில் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொலைகள் செய்வதும், லாஜிக் இல்லாமல் இருந்ததாகவும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது இந்த படம் புதிது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை, பல படங்களைக் காப்பியடித்து ஏதோ ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளனர். ஜென்டில்மேன், தூம், அன்னியன் என எல்லாவற்றையும் கலந்து ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கின்றனர். இயக்குனருக்கு மூன்று எண் ராசியாம். அதனால் 3 மணி நேரம் மூன்று நிமிடங்கள் மூன்று வினாடிகள் படத்தை எடுத்து வைத்திருக்கிறார். நல்லவேளை அவருக்கு ஐந்து ராசியாக இல்லை இல்லை என்றால் 5 மணி நேரம் படத்தை எடுத்து வைத்திருப்பார் என்றும் அவர் கலாய்த்தார். இதுபோல மொக்கை படங்களை எல்லாம் நீளத்தை யாவது கம்மி பண்ணி இருக்கலாம் என்றும், படத்தைப் பார்த்து விக்ரமை விட அதிக ரிஸ்க் நீங்கள் எடுக்காதீர்கள் என்றும் அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video…
Youtube Video Code Embed Credits: Tamil Talkies