Categories: சினிமா

27 வருடங்களை கடந்த நடிகர் Suriya-ன் திரை பயணம்..! வெளியான அசத்தலான போஸ்டர்..!

வெளியிட்டது

1997ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தில் துடிப்பான இளைஞனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் சூர்யா. இப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இருப்பினும் இவருக்கான வரவேற்பு என்பது சினிமாவில் குறைவாக இருந்தது. இந்த சமயத்தில் தான் சூர்யாவின் திரைப்பயணத்திற்கு நடிகர் விஜயகாந்த் எங்கள் அண்ணா படத்தில் நடித்து உதவி இருந்தார்.

27 வருடங்களை கடந்த நடிகர் Suriya-ன் திரை பயணம்..! வெளியான அசத்தலான போஸ்டர்..! 1

பின்னர் சூர்யாவுக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்ததே இயக்குனர் பாலா தான். நந்தா படத்தின் மூலம் சினிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுத்து மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார். இப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது.இப்படத்தை தொடர்ந்து சாக்லேட் பாயாக இருந்த சூர்யா ஆக்சனில் அவதாரம் எடுத்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உருவெடுத்து இருக்கிறார் சூர்யா. தற்போது இவர் சினிமாவில் 27வருடங்களை கடந்து உள்ளார். இதற்காக சூர்யாவின் 44வது படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரல் ஆகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்