சினிமா விமர்சகரா இருந்து இயக்குனராக அறிமுகம் ஆகி இருப்பவர் தான் ப்ளூசட்டை மாறன். இவரை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. படத்திற்காக எதிர்பார்ப்பதை விட இவரின் விமர்சனத்திற்கு எதிர்பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம். தொடர்ந்து படங்களை கடுமையாக போட்டு அடித்து துவைத்து விமர்சனம் செய்து வருகிறார் ப்ளூசட்டை மாறன். இவர் இயக்கிய ஆன்டி இந்தியன் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்து இருந்தனர்.

தற்போது தொடர்ந்து படங்களை விமர்சனம் செய்து வரும் இவர், நடிகர்களையும் அடிக்கடி சீண்டி வருகிறார். இதனால் ரசிகர்களுக்கும் இவருக்கும் இடையே மோதல் அவ்வப்பொழுது நிலவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை கலாய்க்க வேண்டும் என்றால் ப்ளூசட்டை மாறன் முதல் ஆளாக நிற்பார் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தற்போது இவர் நடிகர் விஜய் மற்றும் ரஜினியை சீண்டி பதிவிட்டு உள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் முதல் நாளில் உலகளவு 126 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்து உள்ளது. இதுகுறித்து சினிமா விமர்சகர் மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், கோட் படம் முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா நல்ல வடை சுடுறீங்களே எனவும், அதே போல் இதனை சொல்லுவது ஜெயிலர் 536 கோடி ரூபாய் என வடை சுட்ட ரஜினி ரசிகர்கள் என கூறி இருவரையும் கலாய்த்து உள்ளார்.
GOAT முதல்நாள் வசூல் 126 கோடியாம். நல்லா வடை சுடுறாங்கய்யா. நான் நம்ப மாட்டேன்.
– இப்படிக்கு..
ஜெயிலர் 530 கோடி.. என வடைகளை சுட்டுத்தள்ளிய…
தர்பார் தனபால். pic.twitter.com/NP3Z9bKXPR
— Blue Sattai Maran (@tamiltalkies) September 6, 2024