தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான நடிப்பாலும், நடிகை என்ற பந்தா இல்லாமல் சிம்பிளான தோற்றமும் இவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது. பலரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகையாக பார்க்காமல் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கின்றனர். அந்த அளவிற்கு படங்களில் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது பர்ஹானா என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சனின் தமிழாக்கத்தில் நடித்து பலரது உள்ளங்களை கவர்ந்திருக்கிறார். தொடர்ந்து ரன் பேபி ரன் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அடுத்ததாக தமிழ் புத்தாண்டுக்கு அவரின் சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி வசூலையும் வாரி குவித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும், விஷ்ணு விஷாலுடன் இணைந்து மோகன்தாஸ் என்கிற படத்திலும், அர்ஜூனுடன் இணைந்து தீயவர் குலைகள் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து மூன்று படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தொடர்ந்து மலையாளத்திலும் டொமினோ தாமசுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படி தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அவரின் பர்ஹானா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. கோகுல் பினாய் என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

வி.ஜே சபு இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 12ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி இருக்கும் பர்ஹானா படத்தின் டீசர் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Dream Warrior Pictures