Categories: சினிமா

மும்பையில் செம்ம கூலாக வலம் வந்த ரோல்க்ஸ் சூர்யா.! மும்பையிலேயே செட்டில் ஆகிட்டாரா?

வெளியிட்டது

நடிகர் சூர்யா தற்போது மும்பையில் இருந்து வெளியான வீடியோவால் பயில்வான் சொன்னது போல அவர் மும்பையில் குடியேறிவிட்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ஜோதிகா மற்றும் சூர்யா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிக்க கூடாது என்கிற நிபந்தனையுடன் தான் இந்த திருமணத்திற்கு சிவக்குமார் ஓகே சொன்னதாக அப்போது தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்கிற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். திருமணம் ஆகி சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். அவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா சிவக்குமாரை விட்டு பிரிந்து மும்பையில் குடியேறி விட்டதாக பயில்வான் ஒரு வீடியோவில் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் செம்ம கூலாக வலம் வந்த ரோல்க்ஸ் சூர்யா.! மும்பையிலேயே செட்டில் ஆகிட்டாரா? 1

அதில் அவர் சூர்யாவிடம் சிவக்குமார் உனக்கு ஒரு தங்கை இருக்கிறது என்று கையெடுத்து கும்பிட்டு சூர்யாவின் காதலுக்கு தடைகளைப் போட்டார். ஆனால் பல தடைகளை கடந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிக்க கூடாது என்று நிபந்தனையுடன் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு சிவக்குமார் சம்மதித்தார். திருமணமாகி சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக சிவக்குமாரிடம் கூற, ஹீரோ இல்லை, டூயட் இல்லை என்கிற காரணத்தினால் 36 வயதினிலே படத்தில் ஜோ நடிக்க சம்மதித்தார். ஆனால் தற்போது ஜோதிகா மோகன்லுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை சிவக்குமார் என்னம்மா இது என்று கேட்க இல்லை அங்கிள் மலையாளத்தில் என்னை நடிக்க கூப்பிட்டார்கள் என்றும் அதனால்தான் நடிக்கப் போகிறேன் என்றும் பதில் சொன்னதாக பயில்வான் கூறினார். மேலும் சூர்யா மும்பை விமான நிலைய பார்க்கினை ஏலம் எடுத்தார் அந்த ஏலத்தில் நல்ல லாபம் வருகிறது. அதனால் சூர்யா மும்பையில் குடியேறிவிட்டார் என்று பயில்வான் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

மேலும் சூர்யா பெயரில் ஜோதிகா மும்பையில் ஒரு பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார். இதனால் குழந்தைகளுடன் மும்பையிலேயே ஜோதிகாவும், சூர்யாவும் செட்டில் ஆகிவிட்டனர். சூர்யாவை ஹிந்தியில் எப்படியாவது பெரிய ஹீரோவாக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார் ஜோதிகா என்றும் அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது மும்பையில் இருந்து சூர்யாவின் வீடியோ ஒன்று கசிந்துள்ளது. அதில் அவர் மும்பையில் ஒரு கஃபே ஒன்றில் இருந்து வெள்ளை நிற டீ ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு நடந்து வருகிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் பயில்வான் சொன்னது போல சூர்யா மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்