ராஜா ராணி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட ரியா.! விஜய் டிவியில் இருந்து விலகி போட்டி சேனலுக்கு சென்ற ரியா.!

ராஜா ராணி சீரியலில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நடிகை ரியா விஸ்வநாதன் தற்போது விஜய் டிவியில் இருந்து அதிரடியாக விலகி இருக்கிறார். மேலும் போட்டி சேனல் ஒன்றில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். அந்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை கவர்ந்த ஒரு தொடராக இருக்கிறது ராஜா ராணி.! இந்த தொடரில் தொடர்ந்து பல விலகல்கள் நடைபெற்று உள்ளது. ஆரம்பத்தில் சந்தியாவாக நடித்து வந்த ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் நாடகத்தில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து வில்லியாக நடித்து வந்த விஜே அர்ச்சனா தொடரில் இருந்து விலகினார். ஆலியா விலகிய பின்னர் ரியா விஸ்வநாதன் இந்த நாடகத்தில் நடித்து வந்தார். சுமார் ஒரு ஆண்டுகளாக ரியா சந்தியாவாக நடித்து வந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அவர் மாற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. இது ராஜா ராணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடையவை  "தரமில்லாமல் பலர் விளையாடி வருகின்றனர்" செம்ம கடுப்பில் இருக்கும் கமல்.! ப்ரோமோ இதோ.!

ராஜா ராணி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட ரியா.! விஜய் டிவியில் இருந்து விலகி போட்டி சேனலுக்கு சென்ற ரியா.! 1
அவரைத் தொடர்ந்து இந்த சீரியலை இயக்கி வந்த இயக்குனர் பிரவீன் பென்னட்டும் மாற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் ராஜா ராணி சீரியலின் ரசிகர்கள் “எத்தனை பேரைத் தான் சீரியலில் இருந்து மாற்றுவீர்கள்” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சீரியலை விட்டு வெளியேறிய பின்னர் பேட்டி அளித்த ரியா விஸ்வநாதன் தனக்கு மிகவும் பிரஷர் கொடுக்கப்பட்டதாகவும், தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, இரவில் படுத்தால் தூக்கம் கூட வரவில்லை, அதனால் தான் சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று அதிரடியாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். தனக்கும் சீரியல் குழுவிற்கும் கம்யூனிகேஷன் சரியில்லை. தனக்கு லீவே கிடைப்பதில்லை. மாதத்தில் முதல் 15 நாட்கள் லீவு என்றும் மீதமுள்ள 15 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்றும் ஆரம்பத்தில் கூறினர். ஆனால் ஆலியா விலகிய போது 30 நாளுமே நடிக்கும் நிலைமை ஏற்பட்டது. ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கொடுப்பார்கள். அதில் என் குடும்பத்தினர் கூட என்னால் நேரம் கூட செலவழிக்க முடியவில்லை என்று வேதனையுடன் பேசினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  எனக்கு அதனால தான் விக்ரமனை பிடிக்காம போச்சு.! உண்மையான காரணத்தை சொன்ன மணிகண்டன்.!

ராஜா ராணி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட ரியா.! விஜய் டிவியில் இருந்து விலகி போட்டி சேனலுக்கு சென்ற ரியா.! 3

இந்த நிலையில் ரியா விஸ்வநாதன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்று உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஜீ தமிழில் “சண்டக்கோழி” என்கிற சீரியலில் கதாநாயகியாக நடிக்க ரியா விஸ்வநாதன் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தெரிகிறது. அவருக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியும் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் போட்டி தொலைக்காட்சிகள் ஆகும். இருவரும் இங்கிருந்து அங்கு நடிகர்களை இழுப்பதும் அங்கிருந்து இங்கு நடிகர்களை இழுப்பதுமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஓரங்கட்டப்பட்ட ரியா விஸ்வநாதனுக்கு ஜீ தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment