Categories: சினிமா

பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ..!

வெளியிட்டது

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். சாதாரணமாகவே அவரது படங்கள் கோடிகளில் வியாபாரம் ஆகி வருகிறது. மேலும் 100கோடி வசூல் என்பது அவரின் படத்திற்கு சர்வ சாதாரணமான விஷயமாக அமைந்து இருக்கிறது. தற்போது விஜய் கோட் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கும் நிலையில் , படம் வெளியாவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ..! 1

தற்போது விஜய் வைத்து இருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை விட்டதாகவும் , அதற்கு பதிலாக விலை உயர்ந்த சொகுசு கார் ஆன Lexus LM என்ற காரை வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் விஜயின் வீட்டில் இருந்து அவர் புதியதாக வாங்கிய விலை உயர்ந்த கார் ஆன Lexus LM கார் வெளியே செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த காரின் விலை ரூ . 2.5 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் தன்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமில்லாது வோல்வோ கார்களையும் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்