தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க உள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழக கட்சி யை தொடங்கி உள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வந்தனர். கட்சி ஆரம்பித்த நாள் முதலே சட்டமன்ற தேர்தலை சந்திக்க விஜய் வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவில் கட்சியின் மாநாட்டை நடத்த இருக்கிறார் விஜய். இந்நிலையில் கட்சியின் கொடி எப்பொழுது அறிமுகம் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர். அதன்படி இன்று நடிகர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இதற்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர்.
தற்போது விஜய் தனது கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தி உள்ளார். சிகப்பு மஞ்சள் கலரில் , நடுவில் போர் யானைகளுடன் வாகை மலர் இருக்கும் வகையில் கொடியை அறிமுகம் செய்து உள்ளார் விஜய். தற்போது கொடியின் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.