மலையாள சினிமாவில் தற்போது நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து எழுந்த புகார் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதில் பல முன்னணி நடிகர்களும் சிக்கி இருப்பதே அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எழுந்த இந்த பாலியல் புகாரால் கேரளா சினிமா சங்கமே தற்போது கலைந்து இருக்கிறது. மோகன்லால் உட்பட பலரும் பதவி விலகி இருக்கின்றனர்.

தற்போது நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். இதனால் மலையாள சினிமா உலகம் பெரும் பரபரப்பில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷாலிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் பதிலளித்து இருந்தார். அதில் தவறு யார் செய்தாலும் தண்டனை நிச்சயம்.

தமிழகத்திலும் விரைவில் இதுபோன்ற கமிட்டி அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பெண்களை தவறாக பயன்படுத்த எண்ணுபவர்களுக்கு தண்டனை கிடைக்கும். பெண்கள் இதுபோன்ற நேரங்களில் தைரியமாக இருக்க வேண்டும், யாரவது அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டால் அவர்களை செருப்பால் அடிங்க என ஆக்ரோஷமாக விஷால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.