Categories: சினிமா

நடிகர் விஷ்ணு விஷால் 2-வது திருமணம் செய்து கொண்டாரா!?

வெளியிட்டது
நடிகர் விஷ்ணு விஷால் 2-வது திருமணம் செய்து கொண்டாரா!? 1

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் விஷ்ணு விஷால்.அதை தொடர்ந்து இவர் பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று விருதுகளையும் குவித்தது.

இவர் தனது கல்லூரி தோழியை 2011 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் சமீப காலமாக நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவே விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்லும் புகைப்படங்களும் வெளியானது.

மேலும், இவர்கள் இருவரும் கட்டிப்பிடித்தும், முத்தமிட்டும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் தங்கள் காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜுவாலா கட்டாவை 2-வது திருமணம் செய்து கொள்ள விஷ்ணு விஷால் திட்டமிட்டு இருப்பதாகவும் இதுபற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் பேசப்படுகிறது. விஷ்ணு விஷால் தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எப்.ஐ.ஆர் படத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்