Categories: சினிமா

யோகிபாபு மகனின் 2வது பிறந்தநாள் விழா.! நேரில் வந்து வாழ்த்திய அமைச்சர் மற்றும் நடிகர்கள்.!

வெளியிட்டது

யோகிபாபு தனது மகன் விசாகன் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக தனது வாழ்க்கை ஆரம்பித்தவர் பாபு. அவர் முதன்முதலாக யோகி என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக யோகி பாபு என்று அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது யோகி பாபு அந்தகன், அயலான், சுந்தரா டிராவல்ஸ் 2, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பூமர் அங்கிள் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

யோகிபாபு மகனின் 2வது பிறந்தநாள் விழா.! நேரில் வந்து வாழ்த்திய அமைச்சர் மற்றும் நடிகர்கள்.! 1

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. கூர்கா, தர்ம பிரபு, மண்டேலா போன்ற படங்கள் யோகி பாபு ஹீரோவாக நடித்த சில படங்களாகும். மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா என்கிற படத்தின் மூலமாக சினிமாவில் புதிய உயரத்தை எட்டினார். இதனால் இவருக்கு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்து முடித்துள்ளார். யோகி பாபுவின் குடும்பத்தை பொறுத்தவரை அவருக்கு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மஞ்சு பார்கவி என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவியை கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு.


இந்த தம்பதிகளுக்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விசாகன் என்று பெயர் வைத்தார் யோகி பாபு. முருக பக்தரான அவர் முருகனின் பெயரை சூட்ட வேண்டும் என்பதால் இந்த பெயரையே வைத்திருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு யோகி பாபு மஞ்சு பார்கவி தம்பதிகளுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது மகன் விசாகனின் இரண்டாவது பிறந்த நாள் மற்றும் இரண்டாவது மகளின் பெயர் சூட்டு விழாவை தனது வீட்டில் நடத்தினார் யோகி பாபு. இந்த விழாவிற்கு நடிகர் பார்த்திபன், அமைச்சர் மா சுப்பிரமணியன், நகைச்சுவை நடிகர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்படங்களை மா சுப்பிரமணியன் தனது twitter பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும் வாழ்க்கையையே வெற்றி கொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகி பாபுவின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்தநாள் விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டதாக மா சுப்பிரமணியன் பதிவிட்டு இருக்கிறார். தற்போது யோகி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திலும், தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்திலும், ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்