2 கோடி மதிப்புள்ள Bullet Proof கார் வாங்கிய சல்மான் கான்..! பாதுகாவலர்கள் உடன் நடைபெற்ற பிக் பாஸ் 18 படப்பிடிப்பு..!

பாலிவுட் பாட்ஷாவாக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசைக்கமுடியாத நடிகராக வலம் வருகிறார் சல்மான் கான். கடந்த சில நாட்களாகவே சில கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு மிட்டல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சல்மான் கானுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

2 கோடி மதிப்புள்ள Bullet Proof கார் வாங்கிய சல்மான் கான்..! பாதுகாவலர்கள் உடன் நடைபெற்ற பிக் பாஸ் 18 படப்பிடிப்பு..! 1

விளம்பரம்

மேலும் சில தினங்களுக்கு முன்னாள் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடும் நடத்தி இருந்தனர். இந்நிலையில் சல்மான் கான் தலைக்கு 25 லட்சம் ரூபாய் விலை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சல்மான் கான் முழு பாதுகாப்புடன் இருக்கிறார். இந்நிலையில் துபாயில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கி குண்டுகள் துளைக்காத காரை வாங்கி இருக்கிறார் சல்மான்.

2 கோடி மதிப்புள்ள Bullet Proof கார் வாங்கிய சல்மான் கான்..! பாதுகாவலர்கள் உடன் நடைபெற்ற பிக் பாஸ் 18 படப்பிடிப்பு..! 3

விளம்பரம்

மேலும் இவர் ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால், முழு பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளார். சல்மான் உயிருக்கு ஆபத்து இருப்பது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment