பாக்கியலட்சுமி சீரியலில் உடன் நடிக்கும் நடிகர் உடன் காதலில் இருப்பதாக திவ்யா கணேஷ் குறித்து கிசு கிசு எழுந்த நிலையில் அதற்கு தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார் திவ்யா. அவருக்கு சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

2015ஆம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைக்கிறார் திவ்யா கணேஷ்.இந்த தொடருக்கு பிறகு சுமங்கலி,லட்சுமி வந்தாச்சு,கிராமத்தில் ஒரு நாள் என்ற சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது.னைத்தயும் சரியாக பயன்படுத்தி நடித்த இவருக்கு தற்போது பாக்கியலட்சுமி தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இவரின் கணவராக நடிக்கும் விகாஸ் என்பவரை, திவ்யா காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கிசு கிசு வெளியாகியது. தற்போது அது அனைத்தும் தவறான செய்தி என கூறி வதந்திகளுக்கு நடிகை திவ்யா முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.