ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ஆல்யா மானசா. இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. முதல் தொடரிலேயே மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ஆல்யா. இவர் இதே தொடரில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது இவர் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், யூடியூப் சேனல் வைத்து பல லட்ச ரசிகர்களை தனது பக்கம் வைத்து இருக்கிறார் ஆல்யா மற்றும் சஞ்சீவ். தற்போது இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த தொடர் தற்போது சரியான வரவேற்பினை பெறாததால் இதனை முடிக்க திட்டமிட்டு உள்ளது சன்டிவி.
தற்போது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் ராஜா ராணி தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இவர் தனது குழந்தைகளுடன் கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.