மனம் கொத்தி பறவை என்கிற படத்தில் நடித்த ஆத்மியா தற்போது எப்படி இருக்கிறார் என்று சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆள் அடையாளமே தெரியாமல் அவர் மாறிப் போயிருக்கிறார். சிவ கார்த்திகேயனுடன் இணைந்து கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் மனம் கொத்தி பறவை என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஆத்மியா. அந்த படத்திற்குப் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகளை இல்லாமல் போக, தமிழ் திரைத் துறையில் இருந்தே காணாமல் போய்விட்டார்.

மனம் கொத்தி படம் வெளியான பிறகு 2014 ஆம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்கிற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் வெளியானது. பலருக்கும் தெரியவில்லை. பின்னர் தமிழ் திரையுலகில் இவருக்கு வாய்ப்புகளை கிடைக்காமல் போக தமிழ் திரையுலகில் இருந்து முற்றிலுமாக விலகி இருந்தார். இருந்தபோதிலும் இவருக்கு மலையாளத்தில் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மலையாளத்திலும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் படியாக படங்கள் கிடைக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு அமீபா என்கிற ஒரு படத்தில் நடித்தார். அதேபோல விஜய் சேதுபதி நடித்திருந்த மார்க்கோனி மத்தா என்கிற படத்திலும் நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் முதல் மலையாள படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவந்ததா இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை. அதன் பின்னர் தமிழில் காவியன், வெள்ளை யானை, யூகி என்கிற சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஆத்மியாவிற்கு திருமணம் முடிவடைந்து இருக்கிறது. கேரள மாவட்டம் கண்ணூரை சேர்ந்த சனுப் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். சனூப் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் வைத்து நடைபெற்று இருக்கிறது. இவர்களின் திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து ஆத்மியா படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது மலையாள படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஆள் அடையாளமே தெரியாமல் ஆத்மியா மாறிப் போய் இருக்கிறார். மேலும் அவர் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.