சிம்புவை சூரி வீழ்த்திவிட்டார் என்று ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து 3 படங்களை தோல்வி படமாக கொடுத்துள்ளார் சிம்பு என காட்டமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் பத்து தல மற்றும் வெற்றிமாறன் இயக்கி சூரி நடித்துள்ள விடுதலை ஆகிய படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியிருந்தன. விடுதலை படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் சிம்புவின் பத்து தல படம் சற்று பின் தங்கிய நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற பத்து தல படம் தற்போது வசூல் ரீதியாக விடுதலை படத்தை காட்டிலும் பின் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் பத்து தல படம் வெளியான பின்னர் அது குறித்து விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

ஆனால் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தை பாராட்டி தள்ளிய ப்ளூ சட்டை மாறன், இது ஒரு சர்வதேச திரைப்படம் என்றும், வெற்றிமாறன் ஒரு நல்ல இயக்குனர் என்றும், ஒரு காமெடியனை ஹீரோவாக வைத்து நல்ல படத்தை கொடுத்து தான் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை வெற்றிமாறன் நிரூபித்து விட்டார் என்றும் ப்ளூசட்டை மாறன் பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து இருந்தார்.மேலும் பத்து தல படத்தில் நடித்த சிம்பு ஒரு டம்மி பீஸ் என்றும் மிகவும் மோசமாக கலாய்த்தும் இருந்தார். இந்த கருத்துக்கு தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் எதிர்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களை சீண்டும் விதமாக தற்போது புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் சிம்புவை சூரி வீழ்த்தி விட்டார். பத்து தல படத்தைக் காட்டிலும் விடுதலை முந்தி கொண்டு சென்று விட்டது. சிம்புவுக்கு ஹாட்ரிக் பிளாப். தொடர்ந்து மூன்று தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார் சிம்பு. மஹா, வெந்து தணிந்தது காடு, பத்துதல என்று தொடர்ந்து தோல்வி படங்கள் என்று விமர்சித்திருக்கிறார்.

மேலும் சிம்பு தன்னைத் தானே ஸ்டைலாக காட்டிக் கொள்ளும் ஒரு மாஸ் ஹீரோ, ஆனால் உண்மையில் ரியாலிட்டி என்பது வேறு விதமானது என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த ட்வீட்டை பார்த்த சிம்பு ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர். மாநாடு படத்திற்கு முன்பாக சிம்பு நடித்த பல படங்கள் சொதப்பி இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் தோல்வியை சந்தித்து இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்ரோல் செய்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். பத்து தல படத்தில் இடைவேளைக்கு முன்பு வரை சிம்புவை காட்டாமல் இடைவேளைக்கு பின்னர் தான் சிம்புவை காட்டினார்கள். இது கௌதம் கார்த்திக் படம் என்று அப்போதே பலரும் கலாய்த்த நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறனும் இது போல் கலாய்த்துருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.