Categories: சினிமா

பிரபல நடிகரை கரம் பிடித்தாரா நடிகை பிரிகிடா சாகா…! வைரலாகும் திருமண புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

வெளியிட்டது

ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் பிரிகிடா. இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். இந்த தொடரில் இவர் நடித்த பவி டீச்சர் என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. தற்போது வரை இவரை பலருக்கும் பவி டீச்சர் என்றால் தான் தெரியும் அளவிற்கு புகழ் வாங்கி உள்ளார்.

பிரபல நடிகரை கரம் பிடித்தாரா நடிகை பிரிகிடா சாகா...! வைரலாகும் திருமண புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..! 1

மேலும் 2019ஆம் ஆண்டு வெளியான அயோக்யா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார். இப்படத்தினை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார். பின்னர் இயக்குனர் பார்த்திபன் ஒரே டேக்கில் எடுத்த இரவின் நிழல் படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இப்படத்தின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து உள்ளது.

இவர் கதாநாயகியாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் கார்த்திகை திருமணம் செய்தது போல புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இது படப்பிடிப்பு புகைப்படங்களாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்