பெண்களிடம் ரொம்ப அத்துமீறுகிறார்..! நடிகர் ஜான் விஜய் மீது பாடகி சின்மயி பரபரப்பு புகார்..!

சினிமா துறையில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பாடகி சின்மயி பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். இவரின் மீடுவில் பல நடிகர்கள் சிக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமின்றி, கவிஞர் வைரமுத்து மீதும் சின்மயி பல புகார்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி இவர் பெண்களுக்கு நடக்கும் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

பெண்களிடம் ரொம்ப அத்துமீறுகிறார்..! நடிகர் ஜான் விஜய் மீது பாடகி சின்மயி பரபரப்பு புகார்..! 1

விளம்பரம்

தற்போது நடிகர் ஜான் விஜய் மீது சின்மயி பரபரப்பான புகார் ஒன்றினை வைத்து உள்ளார். முன்னதாகவே ஜான் விஜய் மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது பெண் ஒருவர், ஜான் விஜய் குறித்து சின்மயிடம் புகார் தெரிவித்து உள்ளார். அந்த பெண், சின்மயிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறியதாவது, நடிகர் ஜான் விஜய் சென்னையில் இருக்கும் பிரபல கிளப் மற்றும் பப்புகளுக்கு வருவார் எனவும், அங்கு பெண்களிடம் அவர் தவறான நோக்கத்தில் நடந்துகொள்வார் எனவும் கூறி உள்ளார்.

தொடர்புடையவை  நயனின் 38வது பிறந்தநாளில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்திய விக்னேஷ் சிவன்.!

பெண்களிடம் ரொம்ப அத்துமீறுகிறார்..! நடிகர் ஜான் விஜய் மீது பாடகி சின்மயி பரபரப்பு புகார்..! 3

விளம்பரம்

மேலும் அவருக்கு நோ சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார் எனவும், தான் செலிபிரிட்டி என்பதால் ஓகே சொல்ல வேண்டும் என பின்னாடியே வந்து தொல்லை தருவதாகவும் பெண் சின்மயிடம் கூறி உள்ளார். பாடகி சின்மயி இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இவரா இப்படி எனவும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment