விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டிஎஸ்பி. சேதுபதி, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி பொன்ராம் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி இருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். கார்த்திகேயன் சந்தானம் இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என வெளியாகி அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று இருந்த காரணத்தினால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தற்போது இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பற்றி தற்போது முழு விமர்சனமாக பார்க்கலாம்.!

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1

விளம்பரம்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிமையான பூ வியாபாரியின் மகன் தான் விஜய் சேதுபதி. இவர் வாஸ்கோடாகாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வேலை பார்த்தால் அரசாங்க வேலை மட்டுமே பார்ப்பேன் என்று, தனது தந்தையின் ஆசைக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி. இதற்கிடையில் அன்னபூரணி கதாபாத்திரத்தில் வரும் அணு கீர்த்தியுடன் காதலில் விழுகிறார். ஒரு பக்கம் தந்தையின் கனவை நிறைவேற்ற வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார், மறுபக்கம் ஹீரோயினுடன் காதல் என்று சுற்றித்திரிகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் வருகிறது. இதற்காக விஜய் சேதுபதியின் நண்பர்கள் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். வந்து இறங்கியவுடன் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும், வில்லன் முட்டை ரவிக்கும் மோதல் ஏற்படுகிறது.

தொடர்புடையவை  இது ஒரு இத்து போன படம்....யானை படத்தையும் ஹரியையும் வச்சி செய்த ப்ளூ சட்டை.. இந்த மாறி யாரையும் கழுவி ஊத்துனது இல்லை..

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 3

விளம்பரம்

இதனால் விஜய் சேதுபதி கோபத்தில் வில்லனை அடித்து விடுகிறார். மார்க்கெட்டில் நடந்த இந்த சண்டையால் அவமானமாக உணரும் வில்லன், விஜய் சேதுபதியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார். அங்கிருந்து ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பகை ஆரம்பமாகிறது. இதற்காக தனது தங்கையின் திருமணத்திற்கு கூட வராமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. பின்னர் ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக வெளியே வரும் விஜய் சேதுபதி, எப்படி போலீஸ் ஆனார்? அவருக்கும் வில்லன் முட்டை ரவிக்கும் இடையே நடந்தது என்ன? அவர் வில்லனை பழி வாங்கினாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை. இந்த படத்தில் வழக்கம் போல விஜய் சேதுபதி தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து இளைஞனாக தந்தை ஆசையை நிறைவேற்ற துடிக்கும் துடிப்பான இளைஞராகவும், அதே சமயம் காதலுக்காக ஏங்கும் ஒரு நபராகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 5

விளம்பரம்

புதுமுகமாக களம் இறங்கி இருக்கும் அணு கீர்த்தியின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை. நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள புகழ் வழக்கம்போல் இல்லாமல் அதிகமான காட்சிகளை நடித்து மக்களை சிரிக்க வைத்திருக்கிறார். இவர் இருப்பதால் என்னமோ படம் ஓரளவிற்கு பார்க்கும் படியாக இருந்தது. பல இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. வில்லனாக வரும் முட்டை ரவியின் நடிப்பு பிரமாதமாக அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதியின் தந்தையாக நடித்துள்ள இளவரசுவின் நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் வந்த விமல் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை மிக கச்சிதமாக கொடுத்துள்ளனர். பின்னணி இசை வேலை செய்துள்ளது. ஆனால் பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பொன்ராம் விஜய் சேதுபதி கூட்டணி தோற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்புடையவை  வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது படக்குழு..! வைரலாகும் வீடியோ இதோ.!

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 7

விளம்பரம்

படத்தின் பாசிட்டிவ் விசயங்கள்:

  1. விஜய் சேதுபதியின் நடிப்பு.
  2. வில்லன் பிரபாகரன் மிரட்டல் நடிப்பு. டிமானின் பின்னணி இசை.
  3. ஒளிப்பதிவு எடிட்டிங் ஆகியவை ஓகே.

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 9

விளம்பரம்

படத்தில் நடித்த விஷயங்கள்

  1. மெதுவாக செல்லும் திரைக்கதை.
  2. எதிர்பார்த்த அளவிற்கு வொர்க் அவுட் ஆகாத நகைச்சுவைகள்.
  3. ஏற்கனவே அடித்து துவைத்த பழிவாங்கும் படலத்திற்கான கதைகள்.
  4. பொன்ராமின் இயக்கம்.
  5. காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக அமர்ந்து விஜய் சேதுபதி சரக்கு அடிப்பது போன்ற காட்சிகள்.
  6. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் சேதுபதி எப்படி போலீஸ் ஆனார் என்பது எல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 11

விளம்பரம்

ஆக மொத்தம் நம்பி வந்தவர்களுக்கு வழக்கை சரியாக முடித்துக் கொடுக்காத காவல்துறை அதிகாரியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. டிஎஸ்பி படத்திற்கு தமிழ்கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2/5

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment