நடிகை சைத்ரா ரெட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது அந்தளவிற்கு சின்னத்திரையில் நாயகியாக பெயர் எடுத்து உள்ளவர். கயல் சீரியல் மூலம் கதாநாயகியாக நடித்து இன்று பல ரசிகர்களை கொண்டு கலக்கி வருகிறார். யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் அந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து கலக்கி இருந்தார்.

தற்போது கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சைத்ரா. மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் அண்மையில் சொந்தமாக மாட்டு பண்ணை தொடங்கி இருந்தார். ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது தனது அடுத்த புதிய தொழிலை தொடங்கி உள்ளார். அதனை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
பெங்களூரில் புதிய துணிக்கடை ஒன்றை தொடங்கி உள்ளார் சைத்ரா ரெட்டி. அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி புதிய துணி கடையை தொடங்க உள்ளதாக அவர் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அறிவித்து உள்ளார்.