ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது கனிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் எனும் படத்தின் மூலமாக ஈஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. பின்னர் எதிரி, ஆட்டோகிராஃப், வரலாறு போன்ற படங்களில் நடித்தார். முண்ணனி நடிகையாஐ வலம் வந்த அவர் பின்னாளில் பெரிய அளவில் எந்த படங்களும் கை கொடுக்காததால் பின்னணி பேசுவதிலும் சின்ன திரையிலும் காலடி எடுத்து வைத்தார். சில படங்களில் பாடல்கள் பாடியும் இருக்கிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் நாடகத்தில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகிறார். இந்த நாடகத்தில் அவர் பாவமான பெண்ணாக நடித்து வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து என்கிற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்த வருகிறார். அஜித்துடன் இணைந்து நடித்த அவர் தற்போது சீரியலில் வயதான கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று விமர்சனங்களை பலரும் வைத்தனர். ஆனாலும் பொறுமையான பெண்ணாக நடித்து அவர் அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். இவர் வாழ்க்கையில் சில சோகமான நிகழ்வுகளும் நடந்து இருக்கின்றன. அவரது மகன் பிறந்த போது அவரது இதயம் செயல்படாமல் இருந்ததாகவும் அதனால் தனது பிள்ளையை 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஆபரேஷன் செய்து பிழைக்க வைத்தார்கள். அவனுக்கு இன்னும் அந்த தழும்பு இருக்கிறது என்று கண் கலங்கி பேசி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து இருக்கின்றனர். லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7