மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கனிகா. பிரபல சினிமா நடிகையான இவர் தற்போது சின்னத்திரையில் களம் இறங்கி அதிலும் சாதித்து உள்ளார். இவர் தமிழில் பைவ் ஸ்டார் படத்தில் நடித்து அறிமுகம் ஆகியிருந்தார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் இவருக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தது.

இதனால் மீண்டும் மலையாள சினிமாவிலேயே தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். பல மலையாள படங்களில் ஒப்பந்தமாகி கன்னிகா பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தற்போது அதிக வரவேற்பினை கொடுத்து இருக்கிறது. இந்நிலையில் இவர் முகத்தில் தீ காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளார்.

ஆனால் அது அவர் கோட் படத்தில் நடிக்கும் போது போட்ட மேக்கப் என தெரியவந்துள்ளது.கோட் படத்தில் சில நிமிட காட்சிகளுக்கே வந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View this post on Instagram