நடிகை மஞ்சுளாவின் 10-வது நினைவு நாள்.! குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்.!

மறைந்த பிரபல நடிகை மஞ்சுளாவின் பத்தாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டிருக்கிறது. இதில் அவரது கணவர் விஜயகுமார், மகள்கள் பிரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன்கள் ஹரி மற்றும் ஸ்ரீதேவியின் கணவர் உட்பட பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தற்போது ஸ்ரீதேவி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது தாயின் பிரிவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகள்.

நடிகை மஞ்சுளாவின் 10-வது நினைவு நாள்.! குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்.! 1

விளம்பரம்

கணவர், மனைவி, பிள்ளைகள், மருமகன்கள் என அனைவரும் கலைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். 1970 ஆம் ஆண்டு வெளியான சாந்தி நிலையம் என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சுளா. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு என் உள்ளம் உன்னை தேடுதே என்கிற படத்தில் நடித்த அவர் அதன் பின்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

தொடர்புடையவை  விடுதலை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

நடிகை மஞ்சுளாவின் 10-வது நினைவு நாள்.! குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்.! 3

விளம்பரம்

விஜயகுமாருக்கும் அவருடைய கணவருக்கும் 1976 ஆம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி என்கிற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் விஜய குமாரின் முதல் மனைவிக்கு அருண் விஜய், அனிதா, கவிதா என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த ஆறு பேருமே ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் வனிதா மட்டும் தற்போது இந்த குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.

நடிகை மஞ்சுளாவின் 10-வது நினைவு நாள்.! குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்.! 5
மற்றபடி அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். மேலும் வனிதாவையும் உங்கள் குடும்பத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இந்த குடும்பத்தினருக்கு ரசிகர்கள் அடிக்கடி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சில புதிய புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. ஸ்ரீதேவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

விளம்பரம்

நடிகை மஞ்சுளாவின் 10-வது நினைவு நாள்.! குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்.! 7
2013 ஆம் ஆண்டு மஞ்சுளா காலமாகி இருந்தார். படுக்கையில் இருந்து கீழே விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமாகி இருந்தார். அவரது இறப்புக்கு காரணமாக கிட்னி செயலிழப்பும் மற்றும் வயிற்றில் ஏற்பட்ட ரத்த உறைவும் காரணமாக கூறப்பட்டது. தனது 59 வது வயதில் காலமான மஞ்சுளாவிற்கு இன்று 10வது நினைவு நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.

தொடர்புடையவை  இணையத்தில் வைரலாகி வரும் நடிகை Megha Aakash திருமண வரவேற்பு புகைப்படங்கள்..!

நடிகை மஞ்சுளாவின் 10-வது நினைவு நாள்.! குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்.! 9
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சுளாவின் புகைப்படத்திற்கு விஜயகுமார், பிரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன்கள் ஹரி உட்பட அனைவரும் மலர் தூவி மரியாதை செய்து இருக்கின்றனர். அனைவரும் வெள்ளை நிற உடையில் வந்து அவருக்கு தங்களது மரியாதையை செய்திருக்கின்றனர்.

விளம்பரம்

நடிகை மஞ்சுளாவின் 10-வது நினைவு நாள்.! குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்.! 11
இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ரீதேவி இன்று அம்மாவின் பத்தாவது நினைவு நாள், நம்மை நேசிப்பவர்கள் நம்மை விட்டு விலகுவதில்லை, மரணம் கூட தொட முடியாத விஷயங்கள் இருக்கின்றன, உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் அம்மா, எங்களுடைய எல்லா மகிழ்ச்சிக்கும் பாசிட்டிவிட்டிக்கும், அது தொடர நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் உங்களை கொண்டாடுவோம், லவ் யூ அம்மா என்று பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே பலரும் வனிதா மட்டும் மிஸ்ஸிங் என்று பதிவிட்டு வருகின்றனர்..!

விளம்பரம்

Leave a Comment