Categories: சினிமா

கணவருடன் வெளிநாட்டில் Honeymoon கொண்டாடும் நடிகை Megha Aakash..! வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் மேகா ஆகாஷ். இப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுசுக்கு ஜோடியாக , கவுதம் மேனன் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

கணவருடன் வெளிநாட்டில் Honeymoon கொண்டாடும் நடிகை Megha Aakash..! வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்..! 1

இதன்பிறகு சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதனால் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக போராடிய இவருக்கு நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதனையும் சரியாக பயன்படுத்தி நடிக்க தொடங்கினார். தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மேகா.

இந்நிலையில் இவர் நீண்ட காலமாக காதலித்து வந்த சாய் விஷ்ணு என்பவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.தற்போது இவர் கணவருடன் தேனிலவுக்கு வெளிநாடு சென்று உள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்