இரண்டு நாட்களாக மொட்டை மாடியில் தவித்து வந்த நமீதாவை மீட்ட மீட்புக் குழுவினர்.!

சென்னையில் வெள்ளத்தில் இரண்டு நாட்களாக சிக்கிக்கொண்ட நடிகை நமீதா தற்போது வீட்டின் மேல் தளம் வழியாக பத்திரமாக மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளார். அந்த காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நமீதா. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் நமீதாவின் வீடு முழுவதுமாக மூழ்கியிருந்தது. இரண்டு நாட்களாக வெளியில் வர முடியாமல் மொட்டை மாடியில் தவித்து வந்த அவர், சமூக வலைத்தளம் மூலமாக உதவி கோரியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக மொட்டை மாடியில் தவித்து வந்த நமீதாவை மீட்ட மீட்புக் குழுவினர்.! 1
சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக இரண்டு நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல இடங்கள் வெள்ளக் காடாக மாறி காட்சியளிக்கின்றன் நகரின் முக்கிய வீதிகளில் வெள்ளம் வடிந்த போதும், பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலையில் நடிகை நமீதா வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. இரண்டு நாட்களாக மொட்டை மாடியில் தவித்து வந்த அவர், உதவி கேட்டு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து இன்று மீட்புக் குழுவினர் அவரது வீட்டை அடைந்து மாடி வழியாக நமிதா மற்றும் இரட்டை குழந்தைகளை மீட்டு வந்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ராஜி பற்றிய உண்மைகளை கோமதியிடம் கூறிய பாக்யா.! த ற் கொ லை முடிவை எடுத்த ராஜி.! Promo உள்ளே

இரண்டு நாட்களாக மொட்டை மாடியில் தவித்து வந்த நமீதாவை மீட்ட மீட்புக் குழுவினர்.! 3
அப்போது நமீதா தன் வீட்டில் வளர்க்கும் மூன்று நாய்களையும் கையோடு எடுத்து வந்துள்ளார். இதை பார்த்த நமீதாவின் ரசிகர்கள், இரட்டைக் குழந்தைகளை எடுத்து வருவார் என்று பார்த்தால், நாய்களை தூக்கிக் கொண்டு வருகிறாரே? என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment