Categories: சினிமா

கணவர் Vignesh sivan பிறந்தநாளை கொண்டாடிய நடிகை Nayanthara..! வெளியான ரொமேன்டிக் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்து உள்ளார். தற்போது கதையின் நாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது.

கணவர் Vignesh sivan பிறந்தநாளை கொண்டாடிய நடிகை Nayanthara..! வெளியான ரொமேன்டிக் புகைப்படங்கள்..! 1

தற்போது நயன்தாரா டெஸ்ட் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் கால் தடம் பதித்து இருக்கிறார் நயன்தாரா. தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தற்போது படங்களை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வீடு திரும்பி உள்ளார். மகன்கள் மற்றும் கணவர் உடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழித்து வருகிறார்.

இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் ரொமேன்டிக் ஆக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி நடிகை நயன்தாரா வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்