தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணான இவர் ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து இவர் பொதுவாக எம் மனசு தங்கம், டிக்டிக்டிக் படங்களில் நடித்து உள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.

பின்னர் சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தனக்கான வாய்ப்பிற்கு காத்துகொண்டு இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன் மாணிக்கவேல். இப்படத்தை தொடர்ந்து இவர் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேடி வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் தற்போது விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாடி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் அவரை வர்ணித்து அவரது புகைப்படத்திற்கு கருத்துக்களை கூறி வருகின்றனர்.