Categories: சினிமா

மீண்டும் அம்மாவாகிய நடிகை பிரணிதா..! இரண்டாவது குழந்தை பிறந்தது..! வெளியான புகைப்படம்..!

வெளியிட்டது

கன்னட சினிமாவில் நடித்து அறிமுகமாகிய நடிகை ப்ரணிதா , தமிழில் இவர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்று தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் போராடிய இவருக்கு, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி இவர் நடித்த படமான சகுனி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மீண்டும் அம்மாவாகிய நடிகை பிரணிதா..! இரண்டாவது குழந்தை பிறந்தது..! வெளியான புகைப்படம்..! 1

பின்னர் மீண்டும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கிய பிராணிதாவுக்கு, தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தது. இதனையும் சரியாக பயன்படுத்தி நடித்தார். ஆனால் தொடர்ந்து சினிமாவில் தோல்விப்படங்களாக அமைந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளி விட்டு இருந்தார்.

தற்போது திருமணம் செய்துகொண்ட இவருக்கு மகள் உள்ள நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்