90களின் இறுதியில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரோஜா. முதலில் தெலுங்கில் அறிமுகமான இவருக்கு முதல் படமே தோல்வியைக் கொடுத்தது. எனவே தமிழ் சினிமா பக்கம் திரும்பிய அவர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முண்ணனி நடிகர்களுடனும் நடித்தார். செம்பருத்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே இவருக்கும் செல்வமணிக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
தமிழில் சில படங்களில் அம்மன் வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார் ரோஜா. படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ரோஜாவுக்கு அரசியல் ஆசை வந்தது. ஜெகன் மோகன் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இரண்டு முறை எம்எல்ஏ வாகவும், தற்போது ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
தற்போது ரோஜா புது வீடு ஒன்றை அவரது தொகுதியான நகரி பகுதியில் கட்டி இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக அரண்மனை போல உள்ள அந்த வீட்டை தற்போது அவர் சுற்றி காண்பித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தனது தொகுதி மக்களின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நகரி பகுதியிலேயே பெரிய வீட்டைக் கட்டியுள்ளார் ரோஜா. அந்த வீட்டைப் பார்த்த பலரும் வாயடைத்து போயுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below Video…
Youtube Video Code Embed Credits: Aval Vikatan