தனுஷை அப்படியே உரித்து வைத்து இருக்கும் அவரது மகன் லிங்கா.! வைரலாகும் வீடியோ இதோ.!

தனது தந்தை நடித்த வாத்தி திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள திரையரங்கிற்கு தனுஷின் மூத்த மகன் லிங்கா வருகை தந்திருக்கிறார். அந்த வீடியோவில் பார்க்கும் பொழுது அப்படியே தனுஷை சிறுவயதில் பார்த்தது போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் பிரபல தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனும், பிரபல இயக்குனர் செல்வராகவனின் தம்பியும் ஆவார். இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்று தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்ததால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷை அப்படியே உரித்து வைத்து இருக்கும் அவரது மகன் லிங்கா.! வைரலாகும் வீடியோ இதோ.! 1
அதன் பின்னர் இவர் தேவதையை கண்டேன், யாரடி நீ மோகினி, பொல்லாதவன், படிக்காதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, மூனு, மாரி, தங்க மகன், வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, அசுரன் போன்ற பல நல்ல படங்களில் நடித்து புகழ்பெற்றிருக்கிறார். சில சமூக அக்கறை கொண்ட படங்களிலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் தனுஷ். அதற்கு அசுரன் மற்றும் கர்ணன் இரண்டு படங்களுமே சாட்சியாகும். இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருந்தது. பின்னர் நானே வருவேன், வாத்தி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி சுமார் 40 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது கேப்டன் மில்லர் என்கிற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் தனுஷ் இந்த நிலையில் தனுஷின் மகனின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  படிக்காத கழுதை நீ..! நடிகை ஜோதிகாவை தாக்கிய பாடகி சுசித்ரா...!

தனுஷை அப்படியே உரித்து வைத்து இருக்கும் அவரது மகன் லிங்கா.! வைரலாகும் வீடியோ இதோ.! 3

அதில் தனது தந்தை நடித்த வாத்தி திரைப்படத்தை பார்ப்பதற்காக அவர் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கு வந்திருக்கிறார் லிங்கா. அந்த வீடியோவை பார்க்கும் பொழுது அவர் அப்படியே தனுஷ் போலவே இருக்கிறார். தனுஷ் எப்படி 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் வெளியான போது இருந்தாரோ அதே மாதிரி தற்போது தனுஷின் மகனும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் உருவத்தில் தந்தையைப் போலவும் ஸ்டைலில் தாத்தாவை ரஜினிகாந்தை போலவும் இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment