நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து குறித்து தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா செய்தியாளர் சந்திப்பில் பேசி இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு நாகசைதன்யா மற்றும் நாகர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகை சமந்தா, தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில்,விவாகரத்து என்பது தனிப்பட்ட விஷயம் எனவும், அதனை யாரும் ஊடகங்களில் பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும் அதைப்பற்றி தாங்கள் வெளிப்படையாக பேசவில்லை என்பதால்,அதைப்பற்றி தவறாக பேச வேண்டாம் எனவும் அவர் கூறி உள்ளார். எங்கள் விவாகரத்து நாங்கள் எடுத்த முடிவு , அதில் எந்த அரசியலும் இல்லை எனது பெயரை இழுக்காதீர்கள் என எச்சரித்துள்ளார்.
நான் இதுவரை அரசியல் சார்பு இல்லாமல் இருக்கிறேன் அதுபோல தான் இனியும் இருக்க விரும்புகிறேன் எனவும் காட்டமாக பதிலளித்து உள்ளார் சமந்தா. சமந்தாவின் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் பலத்த ஆதரவை கொடுத்து வருகின்றனர்.