1997ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தில் துடிப்பான இளைஞனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் சூர்யா. இப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து இருக்கிறார் சூர்யா.

தற்போது இவரது மகள் குறும்பட இயக்குனராக உருவெடுத்து உள்ளார். இவரது மகள் தியா Leading Light – The Untold Stories of Women Behind the Scenes என்ற புதிய ஆவணப்படத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்த படமானது, Triloka International Filmfare Awards விழாவில் திரையிடப்பட்டு, சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் என்று இரண்டு பிரிவுகளில் விருதுகளை வாங்கி இருக்கிறது.

இதனை பெருமையாக கூறி தனது இன்ஸ்டாகிராமில் நடிகர் சூர்யா அறிவித்து உள்ளார். அந்த பதிவு , தான் மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும், இது வெறும் ஆரம்பம் தான் என நெகிழ்ந்து பதிவிட்டு உள்ளார். நடிகர் சூர்யாவின் மகளுக்கு, அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram