Categories: சினிமா

நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெற்றி மாறன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் பட நாயகி.!

வெளியிட்டது

நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் படத்தின் மூலமாக ராமராஜன் பட கதாநாயகி ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெற்றி மாறன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் பட நாயகி.! 1

கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’. இந்த படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. இவர் பிரபல நடிகையாக இருக்கும் பானுப்பிரியாவின் சகோதரி ஆவார். 80களிட் இறுதியில் இவர் பிரபல நடிகையாக வலம் வந்தார்.


இந்தப் படத்தில் வந்த “செண்பகமே செண்பகமே..” என்கிற பாடல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த பாடலின் மூலமாக இன்றும் மக்கள் மனங்களில் நினைவில் இருக்கிறார் சாந்தி பிரியா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்த அவர், சில படங்களில் நடித்த பின்பு திரைத்துறையை விட்டு முற்றிலும் விலகி இருந்தார்.


அவர் என்ன ஆனார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற எந்த தகவலும் தெரியாமல் இருந்திருக்கும் நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிப்புத் துறைக்கு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாற்றில் சரோஜினி நாயுடுவாக நடித்து வருகிறார் சாந்திப்பிரியா. மேலும் ‘தாராவி பேங்க்’ என்கிற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில், வர்ஷா பரத் இயக்கும் புது படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் சாந்தி பிரியா. 25 வயதிலிருந்து 55 வரையிலான பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக தெரிகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெற்றிமாறன் படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகிற்கு திரும்ப இருக்கிறார் சாந்தி பிரியா. இந்த தகவலால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்