வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்…!

நடிகர் வேலராமமூர்த்தியின் பிறந்த நாளை இன்று ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடிக்கும் பலரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்...! 1

விளம்பரம்

சின்னத்திரை உலகின் முக்கிய தொடராக விளங்கிக் கொண்டிருக்கிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து சில மாதங்களுக்கு முன்பு திடீரென மரணம் அடைந்திருந்தார் அவரின் மரணம் சின்னத்திரை உலகில் மட்டுமல்லாமல், வெள்ளித்திரைக்கும் பேரிழப்பாக அமைந்திருந்தது.

வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்...! 3

விளம்பரம்

படங்களில் நடிக்க தொடங்கியிருந்த அவர், இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து காலன் அவர் உயிரை பறித்துக் கொண்டான். அவரின் இழப்பிலிருந்து இன்று வரை ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்கள் மீண்டும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்...! 5

விளம்பரம்

இறந்து இத்தனை மாதங்களுக்குப் பிறகும் ஒரு மனிதன் நினைவு கூறப்படுகிறார் என்றால், அது அந்த மாபெரும் கலைஞன் மாரிமுத்துவாகத் தான் இருக்க முடியும். அவரின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை நிரப்புவதற்கு பிரபல நடிகர் வேலராமமூர்த்தியை நடிக்க வைத்து வருகின்றனர். ஆனால் வேலராமமூர்த்தி மக்கள் மனங்களில் இன்னும் இடம் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்புடையவை  Vanitha மகள் கேட்ட கேள்வி..ரம்யா கிருஷ்ணனுக்கு பயந்து தானே வெளிய வந்தீங்க?

வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்...! 7

விளம்பரம்

மாரிமுத்து காமெடி கலந்த வில்த்தனங்களை செய்வார். அவரது பேச்சும் நகைச்சுவையாக இருக்கும். இதற்காகவே ஆண்கள் கூட ‘எதிர்நீச்சல்’ செய்திகளை பார்த்து வந்தனர்.

வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்...! 9

விளம்பரம்

ஆனால் வேலராமமூர்த்தி வருகைக்குப் பிறகு இந்த சீரியல் டிஆர்பியில் பலத்த அடி வாங்கி இருக்கிகிறது. இதை ஈடுகட்ட இயக்குனர் பல திருப்பங்களை செய்து வருகிறார். தற்போது ஆதி குணசேகரன் மகள் தர்ஷினி காணாமல் போய் இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.

வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்...! 11

விளம்பரம்

கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், வேலராமமூர்த்திக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

வேலராமமூர்த்திக்கு பிறந்தநாள்..! மாலை, மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்...! 13

விளம்பரம்

மாலை மரியாதை செய்து அவரது பிறந்தநாளை சீரியல் நடிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். பலரும் வேலராமமூர்த்திக்கு தங்களது பிறந்தநாளை வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment