Selfi எடுக்க வந்த ஏர்போர்ட் ஊழியர்..! தள்ளிவிட்ட நடிகர் சிரஞ்சீவி…! கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது என்பது இயல்பு. பல இடங்களிலும் பிரபலங்கள் தங்களிடம் அன்பாக வரும் ரசிகர்கள் மீது கோபப்படுவது இயல்பாக நடந்து வருகிறது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்து இருந்தாலும் ரசிகர்களும் விடாமல் பிரபலங்களை துரத்தி தான் வருகின்றனர். அண்மையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவிடம் ஆசையாக புகைப்படம் எடுக்க வந்த நபரை அவரின் பாதுகாவலர்கள் தள்ளி விட்டு சென்று இருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Selfi எடுக்க வந்த ஏர்போர்ட் ஊழியர்..! தள்ளிவிட்ட நடிகர் சிரஞ்சீவி...! கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நெட்டிசன்கள் கடுமையாக அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா அந்த நபரை அடுத்து சந்தித்து மன்னிப்பு கோரி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக அந்த சர்ச்சையில் நடிகர் சிரஞ்சீவி மாட்டியுள்ளார். தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி, இன்று விமான நிலையம் வந்த அவரிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

Selfi எடுக்க வந்த ஏர்போர்ட் ஊழியர்..! தள்ளிவிட்ட நடிகர் சிரஞ்சீவி...! கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

இதனால் கடுப்பாகிய அவர் அந்த ரசிகரை தள்ளி விட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகர் சீரஞ்சீவியை வறுத்தெடுத்து வருகின்றனர். ரசிகரிடம் சிரஞ்சீவி நடந்துகொண்டது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment