Categories: சினிமா

நடிகை வாணிகபூரின் மீது வழக்குப்பதிவு!

வெளியிட்டது
நடிகை வாணிகபூரின் மீது வழக்குப்பதிவு! 1

சமீபத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்து திரைக்கு வெளிவந்த ‘வார்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார் . தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தள பக்கத்தில் வாணிகபூர் கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.புகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை குறிப்பிட்டிருந்தார்.

இந்துக்கள் மனதை புண்படுத்தும்படியும் இந்து கடவுள்களை அவமதிப்பதுபோன்றும் வாணிகபூர் மேலாடை உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ராமர் பெயர் எழுதப்பட்ட மேலாடையை எப்படி அணியலாம் என்று எதிர்பார்ப்புகள் கிளம்பின. மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர் ஜோஷிமார்க் போலீசில் ராமர் பெயர் எழுதிய அரைகுறை ஆடை அணிந்து இந்துக்கள் மனதை வாணிகபூர் புண்படுத்தி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாணிகபூரிடம் நேரில் விசாரணை நடத்த தேடி வருகிறார்கள்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்